கர்நாடகாவில் சிறைத்துறை உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டு இருப்பது சந்தேகங்களுக்கு வழி வகுத்து இருப்பதாக ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

148

கர்நாடகாவில் சிறைத்துறை உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டு இருப்பது சந்தேகங்களுக்கு வழி வகுத்து இருப்பதாக, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டது தொடர்பாக விசாரணை தொடங்க இருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்தநிலையில், சிறைத்துறை டிஐஜி ரூபா பணியிட மாற்றம், சிறைத்துறை கூடுதல் டிஜிபி சத்யநாராயண ராவ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு இருப்பது, பல்வேறு சந்தேகங்களுக்கு வழி வகுத்து இருப்பதாக வாசன் தெரிவித்துள்ளார். இந்த மாறுதல்களுக்கு காரணம் அதிகார வரக்கத்தினர் பனிப்போரா அல்லது சிறைத்துறை விதிமுறை மீறல்கள் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை குழு முடிவா என்று அவர் வினவியுள்ளார். இதை மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டிய கடமை கர்நாடக அரசுக்கு இருப்பதாக கூறியுள்ள வாசன், முக்கிய பிரச்சினையில் உயர்மட்ட விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.