தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுவதால் விவசாய கடன் முழுவதையும் ரத்து செய்ய வேண்டும் என த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

197

தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுவதால் விவசாய கடன் முழுவதையும் ரத்து செய்ய வேண்டும் என த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஒமலூரில் நடைபெற்ற இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையான வறட்சி நிலவுவதாக கூறினார். தமிழகத்திற்கு கர்நாடக அரசு தண்ணீர் தர மறுப்பதை குறிப்பிட்ட வாசன்,இதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டால் டிசம்பர் 31 ஆம் தேதி வரை சுங்க கட்டணம் வசூலை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். மேலும் சேலம் உருக்காலை தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து வரும் 12 ஆம் தேதி போராட்டம் நடத்தப்போவதாகவும் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.