தமிழகத்தில் அனைத்து அரசு, பொது மற்றும் தனியார் துறைகளில் தமிழ் மொழி முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும் என்று ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

196

தமிழகத்தில் அனைத்து அரசு, பொது மற்றும் தனியார் துறைகளில் தமிழ் மொழி முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும் என்று ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கி ஏடிஎம்-களில் தமிழ் மொழி பயன்பாடு இல்லாததால், கிராமப்புற வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளார். பொது மக்கள் பயன்படுத்தும் வங்கிகள், பொதுத்துறைகள் ஆகியவற்றில்
பணிபுரியும் பல்வேறு மொழி பேசும் அதிகாரிகளால், அவர்களோடு உரையாடவும், வங்கி தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும் முடியாமல் சாதாரண மக்கள் சிரமப்படுவதாக வாசன் தெரிவித்துள்ளார்.
எனவே, மாநில மொழி பேசும் அதிகாரிகளை நியமித்தல், மாநில மொழியை பேச அதிகாரிகளுக்கு பயிற்சி, மாநில மொழியில் விண்ணப்பங்கள் போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசும், அந்தந்த துறைகளும் மேற்கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன் மூலம் குறிப்பிட்ட காலத்திற்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, பொது, தனியார் துறைகளில் தமிழ் மொழியும் முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் ஜி.கே.வாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.