கர்நாடக முதல்வருக்கு அரசியல்கட்சியினர் ஒருமித்த கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் : ஜி.கே.வாசன் கோரிக்கை

308

தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக முதல்வருக்கு, அரசியல்கட்சியினர் ஒருமித்த கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கர்நாடக முதல்வர் சித்தராமையா தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என கூறியதற்கு, அரசியல்கட்சியினர், விவசாயிகள் ஒருமித்த கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இலங்கை கடற்படையினர் கோடியக்கரையை சேர்ந்த தமிழக மீனவர்களை அடித்து விரட்டியதற்கு கண்டனம் தெரிவித்த வாசன், மத்திய, மாநில அரசுகள் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.