ஊழல் தடுப்பு ஆணைய பொறுப்பில் இருந்து கிரிஜா வைத்தியநாதன் விடுவிப்பு !

371

தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடம் இருந்த ஊழல் தடுப்பு பிரிவு மாற்றப்பட்டு உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்ட பிறகு, அவர் பொறுப்பில் விடுவிக்கப்பட்டார். புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் பொறுப்பேற்றார். ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணைய பொறுப்பையும் கிரிஜா கூடுதலாக கவனித்து வந்தார். சேகர் ரெட்டி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஊழல் தடுப்பு ஆணைய பொறுப்பில் இருந்து கிரிஜா வைத்தியநாதன் அதிரடியாக விடுவிக்கப்பட்டுள்ளார். உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டினிடம் ஊழல் தடுப்பு ஆணைய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளாக ஊழல் தடுப்பு ஆணைய பொறுப்புகளை தலைமை செயலாளரே கவனித்து வந்தது குறிப்பிடத்தக்கது.