தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உட்பட 4 அதிகாரிகள் இன்று ஆஜராக வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் !

216

சென்னை கோயம்பேட்டில் அங்காடி கட்ட நிலம் கையகப்படுத்தப்பட்ட வழக்கில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உட்பட 4 அதிகாரிகள் இன்று ஆஜராக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் பயன்படுத்தாத நிலத்தை திரும்ப ஒப்படைக்குமாறு 2013 -ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவை 3 மாதத்திற்குள் அமல்படுத்துவதாக கடந்த அக்டோபரில் தமிழக அரசு உறுதியளித்திருந்தது. இந்த நிலையில், மனுதாரருக்கு மாற்று இடம் வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவை அரசு அமல்படுத்துமா என்று எதிர்பார்த்து கொண்டிருக்க முடியாது என்று கண்டனம் தெரிவித்த உயர்நீதிமன்றம், அரசுக்கு எதிராக அவமதிப்பு வழக்குகள் வெள்ளம் போல் திரண்டு கிடப்பது தலைமை செயலாளருக்கு தெரியுமா என கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், இந்த வழக்கில், தலைமைசெயலாளர், வீட்டு வசதித்துறை செயலாளர், சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் உள்ளிட்ட 4 அதிகாரிகள் இன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.