பார்முலா1 கார்பந்தய போட்டியில் ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் வெற்றி..!

247

பார்முலா1 கார்பந்தய போட்டியில் ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் 1 மணி 29 நிமிடம் 33.283 வினாடிகளில் இலக்கை கடந்து வெற்றி பெற்றார்.
நடப்பு ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இந்த சீசனின் முதல் பந்தயம் ஆஸ்திரேலிய கிராண்ட்பிரி மெல்போர்னில் நடைபெற்றது. 307 கிலோமீட்டர் தூரம் கொண்ட பந்தய இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். இதில், 4 முறை சாம்பியனான ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டலுக்கும், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
இறுதியில் செபாஸ்டியன் வெட்டல் 1 மணி 29 நிமிடம் 33.283 வினாடிகளில் இலக்கை கடந்து வெற்றி பெற்றார். அவருக்கு 25 புள்ளிகள் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து, 2-வது சுற்று போட்டி ஏப்ரல் 8-ந்தேதி பக்ரைனில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.