ஜெர்மனியில் வெடித்து சிதறிய சுற்றுலா பேருந்து | 17 பேர் பலி, 35 பேர் படுகாயம்

423

ஜெர்மனியில் சுற்றுலா பயணிகளை ஏற்றுச்சென்ற சொகுசுப்பேருந்து வெடித்து சிதறியது. இதில், 17 பேர் பலியாகியுள்ளனர். 35 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தெற்கு ஜெர்மனியில் சுற்றுலா வாகனம் ஒன்று 2 ஓட்டுனர்கள் மற்றும் 46 பயணிகளுடன் பவாரியா நகரின் அருகே உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளத்திற்கு சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென இந்த பேருந்து வெடித்து சிதறியது. இதில் பேருந்தில் பயணம் செய்த 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கி 35 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர். மேலும், 17 பேர் மாயமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் பலரது நிலை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.