ஜெர்மனியில் நடைபெற்ற பொதுத் தேர்தல் : 4வது முறையாக ஏஞ்சலா மெர்க்கல் அதிபராக வெற்றி பெற வாய்ப்பு.

502

ஜெர்மனியில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், அதிபராக ஏஞ்சலா மெர்க்கல் நான்காவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில், ஏஞ்சலா மெர்க்கல் அதிபராக உள்ளார். இவர் பதவியேற்ற பிறகு, நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழித்து, பொருளாதாரத்தை வலிமையாக்கி, ஜெர்மனியை சர்வதேச அரங்கில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த நாடாக திகழ வைத்தார். இதனால், கடந்த 12 ஆண்டுகளாக ஜெர்மனியில், செல்வாக்கு மிக்க அதிபராக ஏஞ்சலா மெர்க்கல் இருந்து வருகிறார். இந்தநிலையில், ஜெர்மனியில் பொதுத்தேர்தல் நேற்று நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி உடனே தொடங்கியது. அதில், அதிபர் ஏஞ்சலா மெர்க்கலின் கிறிஸ்தவ ஜனநாயக கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதையடுத்து, நான்காவது முறையாக ஏஞ்சலா மெர்க்கல் அதிபராக பதவியேற்கிறார்.