ஆறுமுகசாமி ஆணையத்தில், சென்னை மாநகர காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ் நேரில் ஆஜரான நிலையில், நாளை மீண்டும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், இதுவரை 50க்கும் மேற்பட்டோரை விசாரித்துள்ளது. சசிகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், குறுக்கு விசாரணை நடத்தி உள்ளனர். இந்தநிலையில், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது, சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த ஜார்ஜ்-க்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, ஆறுமுகசாமி ஆணையத்தில் ஜார்ஜ் இன்று ஆஜராகி, நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் நாளையும் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களும் நாளை ஆஜராகின்றனர்.