ஜெனிவா வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

1005

ஜெனிவா வங்கியில் கணக்கு வைத்துள்ள 50க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, இந்தியா முழுவதும் கருப்பு பணத்தை ஒழிக்கவும், வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்கவும் துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக சுவிஸ் வங்கியில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே, நாடு முழுவதும் உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டன.
இந்நிலையில், ஜெனிவா எச்.எஸ்.பி.சி. வங்கியில் கணக்கு வைத்துள்ள 50க்கும் மேற்பட்ட இந்தியர்களை, விசாரணைக்கு ஆஜராகுமாறு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நோட்டீஸ் அனுப்பப்பட்ட நபர்கள் குறித்து எந்த தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.