ஏராளமான பொதுமக்களோடு பிரபலங்களும் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்..!

218

தமிழகத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில், ஏராளமான பொதுமக்களோடு பிரபலங்களும் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

தென்சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில், நடிகர் சரத் குமார், மனைவி ராதிகா சரத்குமார் ஆகியோர் வாக்களித்தனர். சென்னை மயிலாப்பூர் திருவிக நகரில், அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் குடும்பத்தினருடன் சென்று, தனது வாக்கை பதிவை செய்தார். நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சங்ககிரி சட்டமன்ற தொகுதி மகுடஞ்சாவடி ஒன்றியத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வாக்கு மையத்தில், சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் ராஜா தமது குடும்பத்தோடு வாக்களித்தார் திருச்சி தில்லை நகர் மக்கள் மன்றத்தில் திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கே.என்.நேரு தனது வாக்கை பதிவு செய்தார். திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப்பள்ளியில் திருவெறும்பூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் பொய்யாமொழி தனது வாக்கை பதிவு செய்தார்.