கியர் இல்லாத ஸ்கூட்டர்: 16 வயது நிரம்பியவருக்கு உரிமம் வழங்க பரிசீலனை! மத்திய அமைச்சர்கள் குழு பரிசீலனை!!

223

புதுடெல்லி, ஜூலை, 25–
இருசக்கர வாகனங்கள் மற்றும் இலகு ரக வாகனங்களை ஓட்டுவதற்கு உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச வயது இப்போது 18 ஆக உள்ளது. இதை குறைப்பது தொடர்பாக மத்திய அமைச்சர்கள் குழு பாராளுமன்றத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.
இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:–
கியர் இல்லாத 100 சிசி திறனுக்கும் குறைவான ஸ்கூட்டர்களை ஓட்ட, 16 வயது பூர்த்தியானவர்களுக்கு உரிமம் வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது என்றார்.
அதே நேரம், இத்தகைய ஸ்கூட்டர்களில் மணிக்கு 80 கி.மீ.க்கு மேல் செல்ல முடியாத வகையில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் 16 வயதுடன் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் 100 சிசி திறனுக்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்களை ஓட்ட முடியாது. 87.8 சிசி திறன் கொண்ட TVS ஸ்கூட்டி பெப்+ மற்றும் ஸ்ட்ரீக் ஆகிய வாகனங்களை மட்டுமே ஓட்ட முடியும்.
இந்த பரிந்துரை ஏற்கப்பட்டால் 100 சிசி திறனுக்கும் குறைவான ஸ்கூட்டர்களுக்கான தேவை அதிகரிக்கும். அதேநேரம், ஸ்கூட்டர் ஓட்டுவதற்கு உரிய பயிற்சியை வழங்கும் வகையில் உரிமம் வழங்கும் நடைமுறையை கடுமையாக்க வேண்டும்.