தலித் மக்களை இழிவுப்படுத்தம் வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை காயத்ரி பேச்சு !

678

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை காயத்ரி ரகுராம், தலித் மக்களை இழிவுப்படுத்தி பேசியது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, திராவிட விடுதலை கழகத்தினர் மதுரை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தனர்.
தனியார் தொலைக்காட்சியொன்றில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதில் பங்கேற்றுள்ள நடிகை காயத்ரி ரகுராம் தலித் மக்களை இழிவுப்படுத்தும் வகையில், சேரி பிகேவியர் என பேசியதாக திராவிட விடுதலை கழகம் குற்றஞ்சாட்டினர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பிக்பாஸ் நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்திட வேண்டும் என்றும் மதுரை காவல்துறை ஆணையரிடம் அவர்கள் புகார் மனு அளித்தனர்.