கவுதமாலா நாட்டியில் நிகழ்ந்த எரிமலை வெடிப்பில் மாயமானோரை தேடும் பணி தீவிரம்..!

301

கவுதமாலா நாட்டியில் நிகழ்ந்த எரிமலை வெடிப்பில் மாயமானோரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கவுதமாலாவில் உள்ள ஃப்யூகோ எரிமலை கடந்த வாரம் வெடித்துச் சிதறியது. இதில் 110 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இந்நிலையில், காணாமல் போனரை தேடும் பணியை அந்நாட்டு மீட்பு குழு தீவிரபடுத்தி இரவு பகலாக பணியில் ஈடுபட்டுள்ளது. யூஃபிமியா கார்சியா என்பவரின் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் எரிமலை சாம்பலில் சிக்கி மாயமானதாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.