கர்நாடகாவில் பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொலை : சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவு

435

பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து, சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
லங்கேஷ் பத்திரிகே என்ற கன்னட பத்திரிகையை நடத்தி வந்த கௌரி லங்கேஷ், பெங்களூருவில் வசித்து வந்தார். மதவாதத்துக்கு எதிராக வெளிப்படையாகக் கருத்துக்களை பதிவிட்டு வந்த அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்தன. இந்தநிலையில், நேற்றிரவு காரில் சென்று விட்டு வீடு திரும்பிய அவரை நோக்கி மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். கெளரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டது கர்நாடகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கடும் கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் சித்தராமையா, சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். மேலும், தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.