சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் ரத்து என்ற மத்திய அரசின் அறிவிப்பு ஏழை, எளிய மக்களை பாதிக்கும் என ஜெ.தீபா கண்டனம் தெரிவித்துள்ளார்.

252

சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் ரத்து என்ற மத்திய அரசின் அறிவிப்பு ஏழை, எளிய மக்களை பாதிக்கும் என ஜெ.தீபா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமையல் எரிவாயு மானியம் இல்லையென்று மத்திய அரசு அறிவித்துள்ளதும், லட்சம் ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் கொண்ட எந்தக் குடும்பத்திற்கும் ரேசன் அட்டை கிடையாது என்று மாநில அரசு அறிவித்துள்ளதும் மக்களை மிகப்பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கேஸ் சிலிண்டர் மானிய ரத்து அறிவிப்பை திரும்ப பெற வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தியுள்ள ஜெ.தீபா,

ரேசன் அட்டை கிடையாது என்ற அறிவிப்பை மக்களின் நலன் கருதி திரும்பப் பெற வேண்டுமென எடப்பாடி அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.