திருவொற்றியூரில் உணவு கழிவுகளிலிருந்து மின்சார உற்பத்தி..!

380

திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் உணவகங்களில் இருந்து கொட்டப்படும் கழிவுகளிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் தனியார் தொண்டு நிறுவனம் 28 லட்சம் ரூபாய் செலவில் இந்த திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. கிராமத் தெருவில் அமைந்துள்ள 350 குடிசை மாற்று வீடுகளுக்கு நாளொன்றுக்கு ஒரு குடும்பத்திற்கு 40 லிட்டர் தண்ணீர் விநியோகிக்கும் திட்டத்தையும், உணவகங்களிலிருந்து கொட்டப்படும் கழிவுகளில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திட்டத்தையும், மாநகராட்சி மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து செயல்படுத்தி உள்ளன.