கங்கை கொண்டான் அருகே கோவில் விழாவுக்கு சென்ற நபரை 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக …

420

கங்கை கொண்டான் அருகே கோவில் விழாவுக்கு சென்ற நபரை 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கால்வாய் பகுதியைச் சேர்ந்தவர் அழகுகிருஷ்ணன். கூலித் தொழிலாளியான இவர், நெல்லை மாவட்டம் கங்கை கொண்டான் அருகேயுள்ள துறையூரில் நடந்த கோவில் விழாவில் பங்கேற்க வந்திருந்தார்.பின்னர் நள்ளிரவில் விழா முடிவடைந்த பின் நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அழகு கிருஷ்ணன் மீது மோதச் செய்து அவரை கீழே விழ வைத்தது. பின்னர் அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்தது. இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், முன் விரோதம் காரணமாக கொலை நடந்ததா என்று விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே குடிபோதையில் கணவனே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இது தொடர்பாக அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர். கொலை செய்த கணவர் ஏழுமலையை கைது செய்தனர்.