கங்கை நதியில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இருப்பதால் பீகாரில் லட்சக் கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

252

கங்கை நதியில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இருப்பதால் பீகாரில் லட்சக் கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வட மாநிலங்களில் 2 வார காலமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கங்கை நதியின் வெள்ளத்தின் தீவிரம் குறைந்ததால் பீகாரில் நேற்று நிலைமை மேம்பட்டது. இந்தநிலையில், தொடர் மழை காரணமாக மீண்டும் அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கங்கையில் அபாய கட்டத்தை தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்து பாய்வதால், தாழ்வான பகுதிகளை மீண்டும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பீகாரின் காந்திகாட், கதின்டா, பகல்பூர், ககல்கான் ஆகிய இடங்களில் கங்கை ஆற்றில் அளவுக்கு அதிகமாக ஆபத்தான நிலையில் வெள்ளம் செல்கிறது. இதனால், கரையோர பகுதிகளில் வசிப்பவர்கள், பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.