விநாயகர் சதுர்த்தியையொட்டி சித்தூர் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

207

விநாயகர் சதுர்த்தியையொட்டி சித்தூர் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
ஆந்திரா மாநிலம் சித்தூர் அருகே காணிபாக்கம் பகுதியில் புகழ்பெற்ற வரசித்த விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள விநாயகர் சிலை தாமாகவே தோன்றி வளர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி வரசித்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடைபெற்றது. பிரசிதிபெற்ற இந்த ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி 21 நாட்கள் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வரசித்த விநாயகர் ஆலயத்திற்கு பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இதனையொட்டி சந்திரகிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செவிரெட்டி 25 ஆயிரம் விநாயகர் சிலைகளை தனது சொந்த செலவில் தயாரித்து தொகுதி மக்களுக்கு வழங்கினார்.