ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய வீரர் ஷர்துல் விகான் வெள்ளிப்பதக்கம்..!

676

ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடும் போட்டியில் டபுள் டிராப் பிரிவில் இந்திய வீரர் ஷர்துல் விகான் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் பதக்க வேட்டை தொடர்கிறது. இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை வெல்லும் முனைப்பில் தீவிரமாக போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். மகளிர் பிரிவு டென்னிசில், இந்தியாவின் அங்கீதா ரெய்னா, சீனாவின சாங் ஷூவாயிடம்4 – க்கு 6,6 – க்கு 7 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தார். இதன் மூலம் அவருக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு மற்றொரு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது. துப்பாக்கி சுடுதல் டபுள் டிராப் போட்டியில், இந்தியாவின் ஷர்துல் விஹான் வெள்ளி பதக்கம் வென்றார். இதனையடுத்து, தற்போது வரை, 4 தங்கம், 4 வெள்ளி மற்றும் 9 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ள நிலையில், பதக்க பட்டியலில் இந்தியா 17 பதக்கங்களுடன் 9-வது இடத்தில் உள்ளது.