மத்திய அரசுக்கு மத்திய சட்ட ஆணையம் பரிந்துரை

கறுப்பு பணத்தை ஒழிக்க இந்தியாவில் சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என மத்திய அரசுக்கு மத்திய சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

கிரிக்கெட் சூதாட்டம் உள்ளிட்ட பல வகையான சூதாட்டங்களால் பலர் ஏமாற்றப்படுவதுடன், குற்றங்களும் அதிகரித்து வந்ததால் இந்தியாவில் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், தொடர்ந்து அரசுக்கு தெரியாமல் பல்வேறு இடங்களில் சூதாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கிரிக்கெட் சூதாட்டங்களில் சிக்கி பல வீரர்கள், மற்றும் முக்கிய பிரமுகர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சூதாட்டத்தை சட்டபூர்வமாக்க வேண்டும் என மத்திய சட்ட ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. பான் கார்டு, ஆதார் எண் ஆகியவை பெறப்பட்டு பணமில்லா பரிவர்த்தனை முறையில் சூதாட்டத்திற்கு அனுமதி கொடுத்தால் கறுப்புப்பணத்தை பெருமளவில் கட்டுப்படுத்த முடியும் என அந்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.