கண்களாலேயே திறப்பது உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 7 அறிமுகமாகியுள்ளது.

259

கண்களாலேயே திறப்பது உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 7 அறிமுகமாகியுள்ளது.
நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி நோட் 7ஐ செல்போனை
சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. நோட் 7ல் செயல்திறன் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை ஒருங்கே அமைந்து இருப்பதோடு, வலுவான பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டது என சேம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தில் இயங்கும் இதில், ஐரிஸ் ஸ்கேனர் மூலம் கண்களை கொண்டே போனை அன்லாக் செய்யலாம். கைரேகை சென்ஸார், தண்ணீர், தூசு உட்புகாத தொழில்நுட்பம், எஸ்-பென் ஆகிய முக்கிய பாதுகாப்பு அம்சங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
இது தவிர 15 ஜி.பி. அளவு கொண்ட சாம்சங் கிளவுட் வசதி, 5 புள்ளி 7 அங்குல H.D. டிஸ்பிளே, ஆன்ட்ராய்ட் 6.0.1 இயங்குதளம், 4ஜி.பி. ரேம், 64 G.B. சேமிப்பகம் என பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட இந்த நோட் 7 வாடிக்கையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பினை உருவாக்கி உள்ளது. வரும் 19ம் தேதி முதல் இந்த செல்போன் விற்பனைக்கு வருகிறது.