வீண் வதந்திகளை நம்பி யாரும் போராட வேண்டாம் : சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

139

கஜா புயலால் தொற்று நோய்கள் பரவாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கஜா புயல் பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்பதற்கு தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறினார். மேலும் புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் எனவும் வீண் வதந்திகளை நம்பி யாரும் போராட வேண்டாம் என்றும் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.