கஜா புயல் புகார்களைத் தெரிவிக்க தொலைபேசி எண்கள்..!

128

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கஜா புயல் பாதிப்பு குறித்த புகார்களைத் தெரிவிப்பதற்கான தொலைபேசி எண்களை ஆட்சியர் அலுவலகம் அறிவித்துள்ளது.

கஜா புயல் பாதிப்பு குறித்து புகார்களைத் தெரிவிக்க தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை 1077 என்ற பொதுவான இலவச எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். இதுதவிர தஞ்சாவூருக்கு 04362–230456 என்ற எண்ணை மாவட்ட ஆட்சியரகம் அறிவித்துள்ளது. பூதலூரைச் சேர்ந்தவர்கள் 04362–288107 என்ற எண்ணிலும் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்தவர்கள் 04372–233225 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். கும்பகோணத்தைச் சேர்ந்தவர்கள் 0435–2430227 என்ற எண்ணிலும் திருவிடைமருதூரைச் சேர்ந்தவர்கள் 0435–2460187 என்ற எண்ணிலும் பாபநாசத்தைச் சேர்ந்தவர்கள் 04374–222458 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

இதேபோல் பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் 04373–235049 என்ற எண்ணிலும் பேராவூரணியைச் சேர்ந்தவர்கள் 04373 – 232456 என்ற எண்ணிலும் தொடர்புகொண்டு கஜா புயல் பாதிப்புகள் தொடர்பான புகார்களைத் தெரிவிக்கலாம் என்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவித்துள்ளது.