அரசியலில் சாதனை படைப்பதற்காக சில நாடுகள் பயங்கரவாதத்தை பயன்படுத்தி வருவதாக ஜி 20 மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய பிரதமர்…

312

அரசியலில் சாதனை படைப்பதற்காக சில நாடுகள் பயங்கரவாதத்தை பயன்படுத்தி வருவதாக ஜி 20 மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
ஜெர்மனியில் உள்ள ஹாம்பர்க் நகரில் ஜி-20 நாடுகளின் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திரமோடி 11 அம்ச ஆலோசனைகள் அடங்கிய குறிப்பை ஜி-20 நாடுகளின் தலைவர்களிடம் வழங்கினார். அதில் பயங்கரவாத குழுக்கள் குறித்தும், அவர்களுக்கு நிதி உதவி வழங்கும் நாடுகள் பற்றிய தகவல்கள் இடம் பெற்று இருந்தன. அப்போது பேசிய அவர், பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத குழுக்கள் குறித்து விளக்கினார். அரசியலில் சாதனை படைப்பதற்காக சில நாடுகள் பயங்கரவாதத்தை பயன்படுத்தி வருவதாக அவர் குற்றம்சாட்டினார். ஜி-20 அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என மோடி கேட்டுக் கொண்டார்.