நாளை மறுநாள் விண்ணில் செலுத்தப்படுகிறது ஜிசாட் 18 செயற்கைக்கோள்…

282

ஜிசாட் 18 செயற்கைக்கோள் வரும் நான்காம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தகவல் தொடர்பு, கடல்சார் ஆராய்ச்சி உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு செயற்கை கோள்களை வடிவமைத்து விண்வெளியில் செலுத்தி வருகிறது. அந்த வரிசையில் தொலை தொடர்பு தகவல்களை துல்லியமாக தெரிந்துகொள்வதற்காக அதிநவீன வசதிகள் கொண்ட ‘ஜிசாட்-18’ என்ற செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்து உள்ளது. 3 ஆயிரத்து 404 கிலோ எடை கொண்ட ஜிசாட்-18 என்ற
அந்த செயற்கைகோள், 15 ஆண்டுகள் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் நான்காம் தேதி இந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரெஞ்சு கயானா ஏவுதளத்தில் இருந்து ஏரியான்-5’ ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ கூறியுள்ளது.
இதற்கான கவுண்ட் டவுன் எனப்படும் நேரக்கணக்கீடு நாளை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.