பொது விநியோக திட்டத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி-ஜி.ராமகிருஷ்ணன்!

307

பொது விநியோக திட்டத்தினை சீர்குலைக்கும் மத்திய அரசின் கொள்கைக்கு, தமிழக அரசு துணைப்போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நிதிஆயோக் ஆலோசனையின் படி அரசு மற்றும் மருத்துவமனைகளை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். 14 ஆண்டுகளாக கந்துவட்டி சட்டத்தினை தமிழக அரசு கடுமையாக்காமல் இருந்ததால் தான், இசக்கிமுத்து குடும்பமே தற்கொலை செய்து கொண்டதாக ஜி.ராமகிருஷ்ணன் குறிப்பிட்டார்.