அம்பேத்கர் சிலைக்கு ஜி.ராமகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை !

250

16ஆம் தேதி திமுக சார்பில் அனைத்து கட்சிக்கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக, இன்று பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
சட்டமேதை அம்பேத்கரின் 126-வது பிறந்த நாளையொட்டி, சென்னை சைதாப்பேட்டையில் எம்பி ராஜா கல்லூரி மாணவர் விடுதியில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமூக ஏற்றத்தாழ்வுகளை போக்குவதே, அம்பேத்கருக்கு செய்யும் மரியாதை என்று கூறினார். நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்திய ஜி.ராமகிருஷ்ணன், மாநில அரசும் இதுதொடர்பாக, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.