தாமிரபரணியிலிருந்து தண்ணீர் எடுக்க அனுமதி அளித்திருக்கும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் : ஜி.ராமகிருஷ்ணன்

223

தாமிரபரணியிலிருந்து தண்ணீர் எடுக்க அனுமதி அளித்திருக்கும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழகத்தில் பருவ மழை பொய்த்ததால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுக்க ஏற்கனவே இருந்த தடையை நீக்கி, பன்னாட்டு நிறுவனத்துக்கு அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும்,நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதால் சீமக்கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், தண்ணீர் எடுக்க அனுமதி அளித்திருப்பது ஆச்சரியம் அளிப்பதாகவும், குடிநீருக்கும், விவசாயத்துக்கும் தண்ணீர் கிடைக்காமல் அவதிபடும் நேரத்தில், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எனவே, தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கான தடையை நீக்கி பிறப்பித்துள்ள உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர் அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.