மத்திய, மாநில அரசுகள் தமிழக விவசாயிகளுக்கு போதுமான அளவுக்கு நிவாரணமும், சலுகையும் வழங்கி, வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்று ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

79

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைத்துவிதமான பயிர்களுக்கும் கடன் வாங்கி செலவு செய்த தொகை அறிவித்த தொகையை விட பல மடங்கு அதிகம் என்பதால், கூடுதல் தொகை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் நாட்களை 200 நாட்களாக உயர்த்தி அறிவிப்பதோடு, சில மாதங்களாக இந்த திட்டத்தில் வேலை வழங்கப்படாமல் உள்ளதால் அவர்களின் குடும்பத்திற்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று வாசன் கூறியுள்ளார்.

விவசாய பாதிப்பால் 17 விவசாயிகள் உயிரிழந்திருப்பதாக அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், மாவட்டம் தோறும், ஊர் ஊராக கணக்கெடுத்து உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் நிவாரணம் போதுமானது இல்லை என்பதால், குறைந்த பட்சம் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று வாசன் வலியுறுத்தியுள்ளார்.