விளை நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு | விவசாயிகள் போராட்டதிற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஆதரவு

93

கோவையில் நடைபெற்றுவரும் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் போராட்டத்தில் பங்கேற்றார்.

விளை நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்டம் சூலூர் அருகே கடந்த 10 நாட்களாக விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் 5-வது நாள் போராட்டத்தில் கலந்து கொண்டார். விவசாயிகளை மத்திய, மாநில அரசுகள் வஞ்சித்து வருவதாக குற்றம் சாட்டிய அவர், உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.