மின் கட்டண உயர்வுக்கு கண்டனம் – ஜி.கே.வாசன்

283

மின் இணைப்பு கட்டணத்தை உயர்த்தும் முடிவை, மின் வாரியம் திரும்ப பெற வேண்டும் என தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், வீடுகளுக்கு வழங்கப்படும் மின் இணைப்பு கட்டணத்தை, மின் வாரியம் 5 மடங்காக உயர்த்தியுள்ளது ஏற்று கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார். தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்துள்ளதால், மின் கட்டண உயர்வும் மக்களுக்கு கூடுதல் சுமையாக இருக்கும் என கூறியுள்ள அவர், தற்போதுள்ள பொருளாதார சூழலில், நடுத்தர மக்களின் நலன் கருதி, பழைய கட்டணத்தையே மின் வாரியம் வசூல் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

மின் கட்டணத்தை உயர்த்துவதற்கு பதிலாக, மின் திருட்டு, மின் கசிவு போன்றவற்றில் கவனம் செலுத்தி மின்சாரத்தை சேமிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள ஜி.கே.வாசன், தமிழக அரசு சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.