சேலம் பசுமை வழிச்சாலை விவகாரத்தை மக்கள் மீது திணிக்கக் கூடாது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை தவிர்க்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். காவிரி நதிநீரை பங்கீட்டுக்கொள்ளும் நான்கு மாநிலங்களும் உச்சநீதிமன்றத்தின் கோட்பாடுகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்திய ஜி.கே.வாசன், சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தை பொதுமக்களின் முழு சம்மதத்துடன் செயல்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.