எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவிற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்..!

247

சென்னை காமராஜர் சாலையில் அமைக்கப்பட உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவிற்கு முதல்வர் பழனிசாமி அடிக்கால் நாட்டினார்.

சென்னை காமராஜர் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தின் அருகில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்படும் என கடந்த ஆண்டு சட்டசபையில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இந்நிலையில் இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்று அடிக்கல் நாட்டினார். இவ்விழாவில் சபாநாயகர் தனபால், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த வளைவு 2 புள்ளி 52 கோடி ரூபாய் செலவில் அழகிய கலைநயத்துடன் கூடிய சிற்ப வேலைப்பாடுகளுடன், சுமாா் 66 அடி அகலமும், 52 அடி உயரத்தில் அமைக்கப்பட உள்ளது.

இதனிடையே, தலைமைச்செயலத்தில் நடைபெற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுக்கான இணையதளம் மற்றும் செயலியை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். விழாவில் உரையாற்றிய அவர், நடிகர்கள் விவேக்,சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு தூதராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இலவச மிதிவண்டிகளையும் வழங்கினார்.