பிரெஞ்சு ஓபன் தொடர்போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் லாத்வியா நாட்டை சேர்ந்த ஜெலினா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

306

பிரெஞ்சு ஓபன் தொடர்போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் லாத்வியா நாட்டை சேர்ந்த ஜெலினா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றாம பிரெஞ்ச் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ருமேனியா நாட்டை சேர்ந்த 4-ஆம் நிலை வீராங்கனையான சிமோனா லாத்வியா நாட்டை சேர்ந்த 47-வது நிலை வீராங்கனையான ஜெலினா ஆகியோர் மோதினர். இதன் முதல் செட்டை சிமோனா 4-6 என்ற புள்ளிகள் கணக்கில் சிமோனா வென்றார். இதையடுத்து கடுமையாக போராடிய ஜெலினா சிறப்பாக ஆடி 6-4, 6-3 என அடுத்த இரண்டு செட்களையும் வென்று பிரெஞ்சு ஓபன் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தார்.
வெற்றிபெற்ற ஜெலினாவுக்கு 15 கோடி ரூபாய் பரிசும், 2 ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் வழங்கப்பட உள்ளன.