ரூ. 2 லட்சம் செலவில் தனிநபர் கழிப்பறை பல மாதங்களாகியும் பயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை.!

129

ராதாபுரம் அருகே 2 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட கழிப்பறைகள் பல மாதங்களாகயும் பயன்பாட்டிற்கு திறக்கப்படாததால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே சிதம்பரபுரம் ஊராட்சியில் கழிப்பறை வசதியின்றி மக்கள் தவித்த நிலையில், தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் கழிவறை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி பொதுநிதியில் இருந்து பத்து பயனாளிகளுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் தனிநபர் கழிப்பறைகள் கட்டப்பட்டன. ஆனால் கட்டிடம் கட்டி பல மாதங்களாகியும் இதுவரை பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படாமல் மூடியே கிடக்கிறது. இதனால் அவதியடைந்த மக்கள், கழிப்பறைகளை உடனடியாக பயன்பாட்டிற்கு திறந்து விட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்…