இலவச செட்டாப் பாக்ஸ் தமிழகத்தில் நாளை முதல் விநியோகிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தெரிவித்துள்ளது.

1666

இலவச செட்டாப் பாக்ஸ் தமிழகத்தில் நாளை முதல் விநியோகிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் குறைந்த கட்டணத்தில் டிவி சேனல்களை ஒளிபரப்பி வருகிறது. இந்தநிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தெளிவாக பார்க்கும் விதமாக, டிஜிட்டல் ஒளிபரப்பு சேவையை தமிழகத்திற்கு கொண்டு வர அரசு முனைப்புடன் செயல்பட்டது. டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ்
இலவசமாக வழங்க வலியுறுத்தி, மத்திய அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தது. இந்தநிலையில், இலவச செட்டாப் பாக்ஸ் நாளை முதல் தமிழகத்தில் விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் பழனிசாமி இதை தொடங்கி வைப்பதாக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் 125 ரூபாய் கட்டணத்தில் 180 சேனல்கள் பார்க்க முடியும். இந்தியாவிலேயே முதன் முதலாக இலவச செட்டாப் பாக்ஸ் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.