36 ரஃபேல் போர் விமானங்களின் தயாரிப்பு நிலை குறித்து பேச்சுவார்த்தை..!

799

இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், 3 நாள் பயணமாக பிரான்ஸ் நாட்டுக்கு இன்று புறப்பட்டு செல்கிறார்.

பிரான்ஸில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இரு நாடுகளுக்கு இடையேயான ராஜிய ஒத்துழைப்பை மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்து அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்துகிறார். பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், பிரான்சுக்கு நிர்மலா சீதாராமன் சுற்றுப்பயணமாக செல்கிறார். அப்போது அவர், இந்தியாவுக்கு அளிக்கப்பட இருக்கும் 36 ரஃபேல் போர் விமானங்களின் தயாரிப்பு நிலை குறித்தும், இரு நாடுகளும் இணைந்து போர்த் தளவாடங்களை தயாரிப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.