பிரான்சில் நடைபெற்ற வண்ணமயமான வான்வெளி சாகச நிகழ்ச்சியில் ஏராளமான வீரர்கள் கலந்துகொண்டு விந்தை நிகழ்த்தினர்.

300

பிரான்சில் நடைபெற்ற வண்ணமயமான வான்வெளி சாகச நிகழ்ச்சியில் ஏராளமான வீரர்கள் கலந்துகொண்டு விந்தை நிகழ்த்தினர்.
பிரான்ஸ் நாட்டில், கண்களுக்கு குளிர்ச்சி தரும் வண்ணமிகு வான்வெளி சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சார்ந்த ஏராளமான வீரர்கள் கலந்துகொண்டு மிரளவைக்கும் சாகசங்களை செய்து அசத்தினர். பல்வேறு வேடமணிந்து விதவிதமான பாராசூட்களை கொண்டு வீரர்கள் வானில் வட்டமிட்ட காட்சி பார்வையாளர்களை பிரமிக்க வைத்தன. விழாவின் சிறப்பம்சமாக, அடர் வண்ண ஆடைகளை அணிந்த இசைக்கலைஞர்கள் மேளதாளம் இசைக்க, அதற்கேற்றாற்போல் டிராகன் வடிவில் உள்ள பலூன்கள் இழுத்து செல்லப்பட்டன. முழுக்க முழுக்க குதுகலத்தை மட்டுமே மையமாக கொண்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சி பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வண்ணம் அமைந்தன.