விளைநிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு..!

135

கோவை அருகே, விளை நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைப்பதை கண்டித்து, 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் மின் கோபுரத்தில் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை, ஈரோடு, திருவண்ணாமலை, கரூர், சேலம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் விளை நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனிடையே விளைநிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கோவை மாவட்டம் சூலூர், சுல்தான்பேட்டை பகுதியை சேர்ந்த விவசாயிகள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றினர். மேலும் அப்பகுதியில் உள்ள உயர்மின் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.