டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காலமானார்..!

170

டெல்லி முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் இன்று காலமானார். அவருக்கு வயது 81.

1988-ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை டெல்லி முதலமைச்சராக 15 ஆண்டுகளாக பதவி வகித்தவர் ஷீலா தீட்சித். முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இணையமைச்சராகவும் பொறுப்பு வகித்தார். சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். உடல் நலக்குறைவால் சில நாட்களுக்கு முன்னர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஷீலா தீட்சித் அனுமதிப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை அவர் காலமானார். அவருக்கு வயது 81. இவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.