நெல்லை கோட்ட விவசாயிகளுக்கான குறைதீர்ப்பு கூட்டம்..!

182

நெல்லையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

நெல்லை கோட்ட விவசாயிகளுக்கான குறைதீர்ப்பு கூட்டம் கோட்டாச்சியர் மைதீலி தலைமையில் நடைபெற்றது. இதில், சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பாபநாசம் அணையிலிருந்து தாமிரபரணி கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். ஓகி புயலால் பாதிக்கப்பட்ட வாழை, நெர்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாச்சியர் உத்தரவாதம் அளித்தார்.