வங்கிகளில் செல்லாத 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள சிறப்புப் படிவத்தை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

306

வங்கிகளில் செல்லாத 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள சிறப்புப் படிவத்தை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் மாற்றிக்கொள்ள வங்கிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பழைய நோட்டுகளை இன்று முதல் மாற்றிக் கொள்ள அனைத்து வங்கிக் கிளைகளிலும் சிறப்புக் கவுன்ட்டர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்புக் கவுன்ட்டர் வரும் டிசம்பர் 30-ஆம் தேதி வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள், வங்கிகளில் இலவசமாக கொடுக்கப்படும் சிறப்பு படிவத்தை பூர்த்தி செய்து, பணத்தை மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. மேலும், சிறப்பு படிவத்தில் பான் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்ட அடையாள அட்டையின் பிரதி அவசியம் என தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, அடையாள எண்ணை சிறப்பு படிவத்தில் குறிப்பிட வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் எந்த வங்கி கிளையிலும் பணத்தை மாற்றிக்கொள்ளலாம் எனவும், இதற்கு வங்கி பாஸ் புக் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 30ஆம் தேதி வரை அவகாசம் இருப்பதால் பொதுமக்கள் கவலைப்பட தேவையில்லை என்றும் ரிசர்வ் வங்கி தெ்ரிவித்துள்ளது.