ஆகஸ்டு 15 முதல் அந்நிய தயாரிப்புகளை புறக்கணிப்போம் – வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் பேட்டி

195

ஆகஸ்டு பதினைந்தாம் தேதி முதல் அந்நிய தயாரிப்புகளை புறக்கணிப்போம் என, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற சங்க பேரவை தலைவர் வெள்ளையன், வணிகர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளையன், நாடாளுமன்ற தேர்தலில் வணிகர்கள் அனைவரும் வாக்களித்ததன் மூலம், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்ற பெருமையை காப்பாற்றியிருப்பதாக தெரிவித்தார். ஆன்லைன் வணிகத்தால் நம் நாட்டு சில்லரை வணிகம் அழிந்துகொண்டிருப்பதை பற்றி, ஆட்சியாளர்கள் சிறிதும் கவலை கொள்ளவில்லை என்றும் பேட்டியின்போது குறிப்பிட்டார்.