கொடைக்கானல் அருகே உள்ள வனப்பகுதியில் அதிக வெயிலின் தாக்கத்தால், மீண்டும் காட்டு தீ ஏற்பட்டுள்ளது..!

334

கொடைக்கானல் அருகே உள்ள வனப்பகுதியில் அதிக வெயிலின் தாக்கத்தால், மீண்டும் காட்டு தீ ஏற்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் வாட்டி வருகிறது. இதனால், கொடைக்கானல் – பழனி பிரதான சாலையில் அமைந்துள்ள கடமன் ரேவு வனப்பகுதியில், அதிக வெப்பத்தின் காரணமாக காட்டு தீ ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பழனி வனசரகர்கள் மற்றும் பெரும்பள்ளம் வனசரகர்கள் எல்லை பிரச்சனையால், தீயை அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடைக்கானல் வனப்பகுதியில் பயங்கர காட்டு தீ ஏற்பட்டு அரிய வகை மரங்கள் கருகி நாசமானது குறிப்பிடதக்கது.