ரஷியாவில் நாளை 21 வது உலக கோப்பை கால்பந்து போட்டி தொடக்கம்..!

222

ரஷியாவில் 21 வது உலக கோப்பை கால்பந்து போட்டி நாளை கோலாகலமாக தொடங்குகிறது.

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நாளை முதல் அடுத்த மாதம் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டியில் மொத்தம் 32 நாடுகளை சேர்ந்த அணி வீரர்கள் விளையாடுகின்றனர். ரஷியாவில் உள்ள 12 மைதானங்களில் 64 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இந்திய ரசிகர்களுக்காக 17 ஆயிரத்து 962 டிக்கெட்டுகளை பிபா ஒதுக்கியுள்ளது. இப்போட்டியை நேரில் காணும் ரசிகர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்காக ரஷிய அரசாங்கம் 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் செலவிட்டுள்ளது. நாளை நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ரஷியாவும், சவூதி அரேபியாவும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியை காண உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.