food

ஆசிய கோப்பை கால்பந்து தொடரில்ல் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என பயிற்சியாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

17-வது ஆசிய கோப்பை கால்பந்து தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஏ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது முதலாவது லீக்கில் தாய்லாந்தை பந்தாடியது. 2-வது லீக் போட்டியில் இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகத்திடம் படுதோல்வியை தழுவியது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டான்டின், நாளை மறுதினம் நடைபெற உள்ள பக்ரைனுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில், இந்தியா வெற்றி பெற்று அடுத்து சுற்றுக்கு முன்னேறும் என நம்பிக்கை தெரிவித்தார்.