உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் – ரஷ்யா அணிகள் பலப்பரீட்சை..!

332

உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி ரஷிய அணியும், டென்மார்கை வீழ்த்தி குரோசிய அணியும், கால் இறுதிக்குள் முன்னேறின.

ரஷியாவில் உலக கோப்பை கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மாஸ்கோவில் நடந்த முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் – ரஷ்யா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் முதல் பாதி நேர ஆட்ட முடிவில், இரண்டு அணிகளும் 1க்கு 1 என சமநிலையில் இருந்தன. வழங்கப்பட்ட கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல்கள் எதும் அடிக்கவில்லை. பின்னர் வழங்கப்பட்ட பெனால்டி ஷூட் முறையில் இரு அணிகளும் அடுத்தடுத்து கோல்கள் அடித்தன.

இறுதியில் 3க்கு 4 என்ற கோல் கணக்கில் ரஷ்யா கால் இறுதிக்கு முன்னேறியது. இதனை தொடர்ந்து நடைபெற்ற 2வது ஆட்டத்தில், குரோசியாவை டென்மார்க் அணி எதிர்கொண்டது. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஒரு கோல் அடித்து டென்மார்க் முன்னிலை வகித்தது. தொடர்ந்து குரோசியாவும் ஒரு கோல் அடித்து முதல் பாதியை சமநிலையில் முடித்தது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி மற்றும் கூடுதல் நேர ஆட்டத்தில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. பெனால்டி ஷூட் முறையில் குரோஷிய அணி டென்மார்க் அணியின் கோல் முயற்சிகளை லாவகமாக தடுத்தது. இதனால் சமநிலையில் நீடித்து வந்த ஆட்டத்தில் 3க்கு 2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்று குரோஷிய அணி காலிறுதிக்கு முன்னேறியது.